தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் விவசாயி இவருடைய மகள் பிரியதர்சினி வயது 19 இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இளம் பெண் வாக்காளர் இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்வது என்று முடிவு செய்தார், இதற்காக பிரியதர்ஷினி பவானியில் இருந்து தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் தெற்கு நத்தம் கிராமத்திற்கு வந்தார், அங்கு உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

முதன்முதலாக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பிரியதர்ஷினி கூறுகையில் நான் இந்த சட்டசபை தேர்தலில் தான் முதல் முறையாக தனது வாக்கினை அளித்து உள்ளேன் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் பவானியில் வேலை செய்தாலும் ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வத்தில் 220 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்து வாக்களித்துள்ள முதன்முறையாக ஜனநாயக கடமை ஆற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ஓட்டு போடுவது எனது உரிமை என்பதால் நான் வானிலிருந்து அங்கு வந்து படித்து உள்ளேன் என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.