தஞ்சாவூர் டிச 30 தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்ல யாகப்பா நகர் வழியாக இரட்டை வழி சாலை உள்ளது, இந்த இருவழிச் சாலை பகுதியில் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கால்நடைகள்உள்ளன அது மட்டுமின்றி புதிய பேருந்து நிலையம் வந்த பின்னால் இது ஒரு முதன்மையான இணைப்புச்சாலையாக உள்ளது.

இதனால் இந்த வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன, இந்த சாலையானது தற்போது பெய்த பலத்த மழையினாலும், போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாலும் பல இடங்களில் சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது.

இதனால் அந்த சாலையில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள் சிக்கி வருகிறார்கள், மேலும் யாகப்பா நகர் சாலை மற்றும் அருளானந்த நகர் சாலை சந்திக்கும் இடத்தில் மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது, இந்த பள்ளத்தில் தினசரி பலர் தவறி விழுந்து காயமடைந்து செல்கிறார்கள், எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்