தஞ்சாவூர் அக்.30 – மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

தஞ்சை அக் 30: உலகம் முழுவதும் பக்கவாத நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பக்கவாதம் குறித்த நோயாளிக்கு உடனான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இது மருத்துவக்கல்லூரி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் வந்தனர் இதில் புகைபிடிக்கக் கூடாது மது அருந்தக்கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.

இதேபோல பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்டால் 4 மணி நேரத்திற்குள்ளாக அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடைய முடியும் என தெரிவித்த முதல்வர் 50,000 ரூபாய் மதிப்பிலான மருந்துகளை இலவசமாக அரசு வழங்கி வருவதாகவும் தனியார் மருத்துவமனையில் 4 லட்சம் ரூபாய் வரை செலவு கூடிய இந்த மருத்துவ சேவை அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கிறது நோயிலிருந்து விடுபட நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய் குறித்த காரணம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து கலந்துரையாடலும் நடைபெற்றது.இதில் மூளை நரம்பியல் மருத்துவர் தங்கராஜ், மூளை அறுவை சிகிச்சை துறை தலைவர் மத்தியாஸ் ஆர்த்தர், பொது மருத்துவத் துறை தலைவர் நமச்சிவாயம், துணை முதல்வர்,நிலைய மருத்துவர் செல்வம் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/