தஞ்சை ஜன 10 தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மனைவி இருதய மேரி வயது (52) அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ராஜசேகரன் மனைவி புனித மேரி (45) வின்சென்ட் மனைவி அருள்மேரி (45) இவர்கள் 3 பேரும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.

நேற்று இவர்கள் 3 பேரும் அந்தப் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றனர், மதியம் அவர்கள் சாப்பிட்டு விட்டு அருகில் இருந்த ஒரு குடிசையில் ஒதுங்கியுள்ளனர், அந்த குடிசை வீட்டின் சுவர் தற்போது பெய்து வரும் மழையினால் நனைந்து சரியும் நிலையில் இருந்ததை அறியாமல் ஒதுங்கியுள்ளனர், திடீரென வீட்டு சுவர் இடிந்து இந்த 3 பேரும் படுகாயமடைந்தள்ளனர், அவர்களை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இருதய மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புனித மேரி, அருள்மேரி,ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,  இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்