தஞ்சாவூர் பிப்.16: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மக்கள் நிறைந்த கிராமமாகும். தற்போது ஆழிவாய்க்கால் நத்தம் கிராமத்தில் ஆறு மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பணி நடைபெறவில்லை. 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆழிவாய்க்கால் பஞ்சாயத்துக் குட்பட்ட தெற்கு நத்தம் கிராமத்தில் 100 நாள் வேலை என்பது ஏறத்தாழ ஆறுமாத காலமாக வேலை நடைபெறவில்லை. இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுக்கப்பட்டும். நேரில் சந்தித்து பேசியும். இதுவரை 100 நாள் வேலை என்பது வழங்க படவில்லை.
மேலும் எங்கள் கிராமத்தில் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள் 100 நாள் வேலையின்மை யின் காரணத்தினால் மிகவும் பசி பட்டினியால் வாடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தெற்கு நத்தம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தெற்கு நத்தம் வல்லம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/