தஞ்சை மே 21 இயற்கை அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஒரு மாத கால தொடர் சேவையாக தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தும் பொருட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

எண்ணற்ற பொதுமக்கள் இந்த கபசுரக் குடிநீர் வழங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் அருந்திச் சென்றனர். இந்த நிகழ்வில் தஞ்சாவூர் இயற்கை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் லயன் SK.வடிவேலன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநகர தலைவர் லயன் H.அப்துல் நசீர், மாநகரச் செயலாளர் கணேஷ், ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் லயன் ஜாகிர் உசேன், அன்வர் பாட்சா யாகுபி மஹால்லா மற்றும் சிபிஎம் மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

கபசுர குடிநீர் குடிப்பது மட்டுமல்லாது, நல்ல தரமான முகமூடி அணிவது, பொது வெளியிலும், வீட்டிலும் நல்ல இடைவெளி விட்டு அமர்வது, சூடான நீரை பருகுவது, மூச்சை நன்றாக நுரையிரலுக்குள் இழுத்து நிறுத்தி பின்பு வெளியேற்றுவது, திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு போவதை பெரும்பாலும் தவிர்ப்பது ‍போன்ற செயல்களை கடைபிடித்து கொரோனாவை துரத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

செய்தி க,சசிகுமார் நிருபர்.
தஞ்சை