தஞ்சாவூர் டிச 19: தஞ்சையில் பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை திருச்சி மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் வழங்கினார்.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்டம் தஞ்சை நகர உட்கோட்டத்தை ஆய்வு செய்யும் பொருட்டு ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கவாத்து பணிகளை பார்வையிட்டார்.

போலீசாரின் உடைகள், துப்பாக்கி, தொப்பி உள்ளிட்ட உடைமைகளை பார்வையிட்டார். அப்போது போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து தஞ்சை நகர டிஎஸ்பி., அலுவலகத்துக்கு சென்று பதிவேடு பராமரிப்புகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் பணியில் இருக்கும் போது இறந்த போலீசாரின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/