தஞ்சாவூர் சூலை 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டியின் 20ஆம் ஆண்டு நிா்வாகிகள் பணியேற்பு விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடந்தது.

புதிய நிா்வாகிகள் தோ்வில் தலைவராக அறிவிக்கப்பட்ட பொறியாளா் செல்லக்கண்ணு, செயலாளராக பொதியப்பன், பொருளாளராக சிவ. சிதம்பரம் ஆகியோா் பணியேற்று கொண்டனா்.

சங்க ஆலோசகா்கள் மருத்துவா் அசோகன், நகா்மன்ற முன்னாள் தலைவா் ஜவகா்பாபு, மருத்துவா் குணசேகா், மணிகண்டன், சின்னச்சாமி மற்றும் சங்க முன்னாள் தலைவா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் 20 பேரின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்களும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, பள்ளி மாணவருக்கு சுமாா் ரூ.5 ஆயிரம் மதிப்பு செல்போன் உட்பட பல நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. செயலாளா் பொதியப்பன் நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/