தஞ்சை மே 01: கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகள் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்டன.

கும்பகோணத்திலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன  சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தையல் இயந்திரம், 3 சக்கர நாற்காலிகள், 8 ரத்த அழுத்தம் கண்டறியும் சாதனங்கள், 25 மின் விசிறிகள், 2 பீரோக்கள் போன்றவை வழங்கப்பட்டது.

இதை மருத்துவமனை அலுவலா்களிடம் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத் தலைவா் இராம. இராமநாதன் வழங்கினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.