தஞ்சாவூர் நவ,16- தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார் கூட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சத்துணவுத் திட்டம் மூலம் கருணை அடிப்படையில் ஒருவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை ஒருவருக்கு சத்துணவு சமையலர் பணிக்கான பணி நியமன ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நடைபெற்ற கூட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த நம்பிவயல் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜா, தான் பயன்படுத்திவந்த ஊன்றுகோல் சேதமடைந்து விட்டதால் புதிதாக ஊன்றுகோல் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்’ இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு ஊன்றுகோலை உடனடியாக வழங்கினார்.

விண்ணப்பித்த உடனே ஊற்று கோல் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா (வருவாய்) ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/