புவி வெப்பமயமாவது என்பது கடந்த 100 வருடங்களாக ஏற்பட்டு வரும் மிகப்பெரிய மாற்றமாகும், இதனால் துருவப்பகுதிகளிலுள்ள, பனிப்பாறைகள் உருகி வருகின்றன, இதனால் கடல் மட்டம் அதிகரித்து வருகின்றது, பல கடற்கரை நகரங்கள் முழ்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தப் புவி வெப்பமயமாவது, தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள், அதன் புகை, மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் பலவற்றால் தொடர்ந்து இந்த பூமி பந்து அழுக்காவதோடு, வெப்பமாகியும் வருகின்றது.

இது போன்ற காரணங்களால் பூமியின் சுற்றுபுறச்சூழல் ஒரு நிலையற்று பல இடங்களில் மக்கள் வெளியே தலைக் காட்ட முடியாத அளவிற்கு வெப்பமும், பல இடங்களில் தொடர் மழையால் நகரமே முழ்கிடும் அபாயமும் நிகழ்ந்து வருவதை நாம் சில ஆண்டுகளாக அதிகம் காண முடிகின்றது.

இந்த புவியின் சுற்றுப்புற சூழல் மாற்றத்திற்கு மனிதர்களின் தொழிற்சாலை மற்றும் வாகனப்பயன்பாடுகள் தான் மிக முதன்மையான காரணியாக உள்ளது என்பதை நாம் இந்த கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட ஊரடங்கில் சாமானியர்களும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

கடந்த ஒரிரு ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மழையின் பொலிவும், ஆற்றில் தண்ணிரின் வரத்தும் போதுமானதாக உள்ளதால், வேளாண்மை நல்ல முறையில் நடந்து வருவதோடு கால நிலையில் மாற்றங்களையும் காண முடிகின்றது, அதன் தொடர்ச்சியோ என்னமோ சூரியனை மேகங்கள் மறைத்து  அதிராம்பட்டிணம்-முத்துப்பேட்டைச் சாலை காலை 11மணிக்கு விடியும் காலை 6 மணிப் போல காட்சியளிக்கிறது, எது என்னமோ மாற்றங்கள் மக்களுக்கு நன்மையை விளைவித்தால் சரி.

செய்தியும் காட்சியும் : ம.செந்தில் குமார்