தஞ்சாவூர் செப்.3- தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூர் நகர், பகுதியை சேர்ந்த ரெப்கோ வங்கியில் பணிபுரியும் ஜெகதீஷ், எழிலரசி, தம்பதியரின் 21, மாத பிஞ்சு குழந்தை பாரதி, முதுகுத்தண்டு வட தசைநார்ச் சிதைவு (Spinal Muscular Atrophy – Type 2) என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட நோயிலிருந்து பாரதி குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டி உள்ளது.

இந்த ஊசியானது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை ரூபாய் 16 கோடி ஆகும். இந்த குழந்தையை காத்திட 30.09.21 க்குள்ளாக மேற்கண்ட நிதியை திரட்ட வேண்டி அவர்களது பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை அவர்களது நண்பர்களுடன் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் அந்த குழந்தைக்கு உதவுகின்ற வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிதி திரட்டும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் துவக்கி வைத்தும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இந்த குழந்தைக்கு தேவையான நிதியை வழங்க முன்வருமாறு தன்னார்வ அமைப்பு உறுப்பினர்களையும், பொதுமக்களையும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேற்கண்ட நிதியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Account Name: Support Bharathi, Account Number: 378401000000550, IFSC Code: IOBA0003784, MICR Code: 613020024 என்ற கணக்குக்கு ஆன்லைன் மூலமாக செலுத்திடலாம். மேலும் விவரங்களுக்கு 9791793435, 9842455765 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


இந்த நிகழ்வில் ரெட்கிராஸ் ஆலோசனை குழுத் தலைவர் டாக்டர் வரதராஜன், தஞ்சாவூர் குடிமக்கள் மன்ற துணை தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சசிராஜ், ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு, தொழில் வர்த்தக சங்க தலைவர் பொறியாளர் பாலசுந்தரம், அகில இந்திய கட்டுனர் சங்கம் தலைவர் மேகன், ரோட்டரி சங்க ஆளுநர் தேர்வு செங்குட்டுவன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் முகமது ரபி, இன்னர்வீல் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் உஷா நந்தினி விஸ்வநாதன், ஜூனியர் சேம்பர், மதர் தெரசா பவுண்டேஷன், ரெடிங்டன் பவுண்டேஷன், ஏகம் பவுண்டேஷன் மற்றும் சேவாலயா பவுண்டேஷன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிதி திரட்டும் பணியினை ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்து செய்து வருகிறார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/