தஞ்சை சூன் 29 தஞ்சை மாவட்டம் பின்னையூர் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிக்கு செல்லும் இரும்பு குழாய் மற்றும் தொட்டியிலிருந்து தண்ணீர் குழாய்களுக்கு செல்லக்கூடிய இரும்பு குழாய் ஆகியவை உடைந்து சேதமடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது.

திருவோணம் ஒன்றியம், பின்னையூர் ஊராட்சியை சேர்ந்த சல்லாரிபட்டி பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அங்குள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல் உள்ள தொட்டிக்கு செல்லும் இரும்பு குழாயும், தொட்டியிலிருந்து தண்ணீர் குழாய்களுக்கு செல்லக்கூடிய இரும்பு குழாயும் உடைந்து சேதமடைந்துள்ளது. இதிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள குழாய்களை சீரமைத்து மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்