தஞ்சையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது இன்றும் தொடர்ந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது, இதனை மாவட்ட ஆட்சியர் திரு கோவிந்த ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது 18 வயது நிரம்பியவர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்ய முகவரி மாற்றம் செய்ய, அதற்குரிய படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளில் வழங்கலாம் என்றும் கூறினார்.