தஞ்சாவூர் டிச, 10. -நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இடப்பட்டுள்ள தஞ்சை மாவட்டத்தில் 4 சதவீத லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்தார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் பின்னர் அவர் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சி பட்டுக்கோட்டை நகராட்சி, வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பந்துருத்தி, பேராவூரணி, பெருமகளூர், மதுக்கூர், ஆடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை, ஆகிய 20 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தஞ்சை மாநகராட்சியின் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 506 வாக்காளர்களும் பட்டுக்கோட்டை நகராட்சி 62 ஆயிரத்து 477 வாக்காளர்களும் 20 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 885 வாக்காளர்களும் என மொத்தம் 4 லட்சத்து 77 ஆயிரத்து 868 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களுக்கும் வழங்க நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் (வருவாய்) கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மங்கையர்க்கரசி வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) வீரமணி மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/