இளைய தளபதி என்று திரை துறையில் கொண்டாடப்படும் நடிகர் விஜய் இன்று ஒரு வித்தியாசமான முறையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார், பொதுவாக நடிகர்கள் காரில் சென்று விரைவாக வாக்கைச் செலுத்தி விட்டு மக்களின் கூட்டத்திற்கு முன்பு திரும்பி விடுவார்கள், ஆனால் இன்று நடிகர் விஜய் தனது கறுப்பு சிவப்பு நிற மிதி வண்டியில் முகத்தை மறைக்காமல் வாக்குச் சாவடிக்குச் சென்றார்.

விஜய் மிதி வண்டியில் வாக்களிக்கச் ச‍ென்றது அவர் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை உயர்வை தனது மிதி வண்டி பயணத்தின் மூலம் மக்கள் உணர்த்தவே செய்தார் என்றும் அந்த நிகழ்வு #Tag # Thapathy #Petroldieselpricehike ஆக சமூக வலைதளங்களில் பரவி வருதையும் பார்க்க முடிகின்றது, மிதி வண்டியில் சென்று பின்னர் அவர் ஒருவருடைய ஸ்கூட்டரில் திரும்பினார். இது மக்களுக்கு மாற்றத்திற்கான சமிஞை தருவதற்காக செய்தார் என்றே கூறப்படுகின்றது.

செய்தி இணைய நிருபர்.