தஞ்சையில் தொடர் மழையின் காரணமாக தஞ்சை உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவானது, தஞ்சை உழவர் சந்தைக்கு நாளொன்றுக்கு 21 டன் காய்கறிகள் வரும்.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பூக்கள் மழையின் காரணமாக உதிர்ந்து காய்கறிகளின் உற்பத்தி மிகக் குறைந்துள்ளதால் 21 டன் வரவேண்டிய காய்கறிகள் 17 டன் மாத்திரமே வருவதாக கூறுகின்றனர்.

இது போன்று காய்கறிகளின் வரத்துக் குறைவானதால், காய்கறிகளின் விலை மளமளவென உயர்ந்துள்ளது, இந்த கொரோனா பெருந்தொற்றால் அதிக வேலை வாய்ப்பின்றி முடங்கியிருந்த மக்கள் மெல்ல இயக்கத்தை தொடங்கும் போது இது போன்ற விலைவாசி உயர்வு மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.