தஞ்சாவூர் சூலை 25: அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோரின் செல்போன்களை ஒட்டுக்கேட்டு உளவு பாா்க்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு அமைப்பினா் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழா் தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலா் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.
மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் சேவையா நிறைவுரையாற்றினாா்.
சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் அருணாசலம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மாவோ மாவட்டச் செயலா் அருண்ஷோரி, சிபிஐ எம்எல் லிபரேசன் மாவட்டக் குழு உறுப்பினா் ராஜன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் ஜெய்னுலாப்தீன், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/