தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வல்லத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது இதற்காக ரூபாய் 34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத.

இதனால் வல்லம் நகரெங்கும் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்தநிலையில் வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி வழியாக கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள முதன்மைச் சாலையில் தஞ்சை திருச்சி சாலையில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன ராட்சச குழாய்கள் அமைக்கும் பணிகளும் மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதனால் தஞ்சை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது, தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வல்லம் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் கடைவீதி வழியாக செல்லாமல், வல்லம் அரசு மருத்துவமனை சாலை வழியாக சென்று பின்னர் ஆலக்குடி புறவழிச்சாலை வழியாக திருச்சி தஞ்சை சாலையில் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சியில் இருந்து வரும் வாகனங்களும் வல்லம் புறவழிச்சாலை பிரிவு வழியாக செல்லாமல் ஆலகுடி புறவழிச்சாலை வழியாக வல்லம் வந்து பின் தஞ்சை நோக்கி செல்ல வேண்டும், இது அனைத்து பேருந்து லாரி மற்றும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும் இந்த பணிகள் முழுவதுமாக ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர்.

வல்லம் பேரூராட்சி ஒரு கல்வி வளாகம் என்றுச் சொல்லும் அளவிற்கு, வல்லம் பேரூராட்சியில் 2 பல்கலைக்கழகங்கள் 6 கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.