தஞ்சை சூலை:10. தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கிராமத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் (46),வி .ஏ .ஓ .வாகபணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா இவர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
செந்தில்குமார் இந்திய கடற்படையில் 20 வருடங்களாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றபின் கடந்த 6, ஆண்டுகளாக வி. ஏ. ஒ.வாக, விளார், குரு வாடிப்பட்டி பகுதியில் வி. ஏ.ஓ.வாக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார், இவர் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து சான்றிதழ்களை உரிய நேரத்தில் காலதாமதமின்றி வழங்குவது பொதுமக்களை அலைகழிக்காமல் உரிய சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் குரு வாடிப்பட்டி கிராமத்துக்கு பணிபுரிய வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்தாலும்,அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த லெனின் மற்றும் பொதுமக்கள் கூறும்போது எங்களது கிராமத்தில் எத்தனையோ வி. ஏ. ஒ,க்கள் பணியாற்றினர், ஆனால் தற்போது பணியாற்றி வரும் வி.ஏ.ஓ. செந்தில்குமார் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடனும், மதை நேயத்துடன் பணியாற்றி வருகிறார்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட உடன், உடனடியாக ஊருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்தார். அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை தனது சொந்த செலவில் வழங்கினார், எங்களது கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர், விதவைகள் என ஏராளமானனோருக்கு உதவித்தொகை பெற்றுத் தந்துள்ளார்.
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு ரேஷனில் அரிசி கிடையாது என்பதால் தன்னுடைய சொந்த செலவில் மாதந்தோறும் அரிசியை வாங்கி கொடுத்து வருகிறார், இப்படி எங்களில் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அவருக்கு மூன்று ஆண்டுகளில் வேறு ஊருக்கு மாற்றலாகி விடுவார் என்பதால் அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம்.
மேலும் கிராமத்தில் மரக்கன்றுகளை நினைவாக நட்டுள்ளோம். பெண்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் பரிசு பொருட்களை கொடுத்தும் கும்மியடித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து விஏஓ செந்தில்குமார் கூறுகையில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறேன், நான் கடற்படையில் இருபது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இந்தப் பணியில் சேர்ந்துள்ளேன்.
ஏற்கனவே விளார் கிராமத்தில் பணியாற்றும்போது அங்கு 500 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினேன், தற்போது இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். எனது பிறந்தநாளை கொண்டாடியது பெரும் மகிழ்வை நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் மக்களிடத்தில் நேர்மையாக பணியாற்றினால்” மக்கள் கொண்டாடுவார்கள், இது நேர்மைக்கு கிடைக்கும் பரிசு விலை மதிக்க முடியாத அவர்களின் நெகிழ்ச்சியான பாசத்தோடு மனதில் வைத்து மக்கள் கொண்டnடுவார்கள். என்பதை தெரிந்துக் கொண்டேன், நேர்மைக்கு கிடைத்த பரிசாக தான் நினைத்து மகிழ்கிறேன், என்றார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/