தஞ்சாவூர்: இணையம் வழியாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் சிறப்பு பரிசை தஞ்சை அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பெற்று சாதித்துள்ளார்.

தேன் அமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் தனி நிகர் மனிதர்கள் உலக சாதனை புத்தகம் ஆகியவை சார்பில் உலகளாவிய அளவில் பேச்சுப்போட்டி இணையம் வழியாக நடந்தப்பட்டது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த பேச்சுப்போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், இலங்கையை சேர்ந்த 67 பேர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12 ம் வகுப்பு மாணவி ஜீவிதா சிறப்பு பரிசை பெற்று சாதனைப் படைத்தார்.

மாணவிக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/