தஞ்சை 18: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு விலையில்லா பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, அதன்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பகுதிகளை சேர்ந்த 125 குடும்பங்களுக்கு விலையில்லா பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஒரத்த நாட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமை தாங்கினார், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் கலந்து கொண்டு வைத்திலிங்கம் எம்.பி 120 குடும்பங்களுக்கு விலையில்லா பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசியதாவது பல்வேறு திட்டங்கள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது குறிப்பாக மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது, எனவே இது போன்ற நல்ல திட்டங்களை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தலைவர் காந்தி முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ரவிச்சந்திரன் நிலவள வங்கி தலைவர் தேவதாஸ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுமதி கார்த்திகேயன் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தந்தை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி அனைவரையும் வரவேற்றார்.

நிறைவாக ஒரத்தநாடு தாசில்தார் அருணகிரி நன்றி கூறினார், முன்னதாக கிளாமங்கலம் ஆம்பலாபட்டு தெற்கு ஆகிய நான்கு இடங்களில் அம்மா மினி கிளினிக்கை வைத்திலிங்கம் திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை