தஞ்சை ஏப்ரல் 14 பட்டுக்கோட்டை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில் பட்டுக்கோட்டையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள சி.ஆர்.சி. பணிமனை ஓட்டுநர் பயிற்சி வளாகத்தில் போக்குவரத்துக்கழக தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில் தலைமையில், கிளை மேலாளர் தங்கராசு முன்னிலையில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 106 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

டாக்டர் சாமிபாலாஜி அவர்களின் தலைமையில் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

செய்தி நாகராஜன்
பூதலூர்.