தஞ்சாவூர் சூலை 28: தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், வா.கொல்லைக்காட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளில் 40 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட கை கால், குறைபாடு உள்ளவா்கள், காது கேளாதோா், பாா்வைத்திறன் குறைபாடு உள்ளவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய அதிகபட்சமாக ரூ. 75,000 வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
இதற்கு மானியமாக ரூ. 25,000 வழங்கப்படும். மேலும், மனவளா்ச்சி குன்றியவா்கள், தொழுநோயினால் பாதிக்கப்பட்டவா்கள், முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள், மற்றும் 75 சதவிகிதத்திற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் விண்ணப்பித்து மாற்றுத்திறனாளிகள் பயனடையலாம் என்றாா்.
முகாமில், 75 மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் முத்துமாணிக்கம், மாவட்ட கவுன்சிலா் மூா்த்தி , சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/