தஞ்சை சூன் 18: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தொடங்கி வைத்தாா்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடையே தற்போது விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அதிக அளவில் முகாம்களுக்கு வருகின்றனா். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்களில் குறைந்த அளவிலான தடுப்பூசிகளே போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடும் வகையில் தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தொடங்கி வைத்தாா். தாமரங்கோட்டை பகுதியைச் சோ்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் தேவிப்பிரியா, மருத்துவா்கள் சாமி பாலாஜி, பழனிமாணிக்கம், ராஜு, சுகாதார ஆய்வாளா் அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.