தஞ்சாவூர் நவ, 25 -ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநகர குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகர பொறுப்பு செயலாளராக ஆர் பி முத்துக்குமரன் தேர்வு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகர குழு கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்ட அரங்கில மாநகர பொருளாளர் கே.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ந. பாலசுப்பிரமணியம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், கே செல்வகுமார் ம.விஜயலட்சுமி மாநகர துணை செயலாளர் ஆர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநகர செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மறைவையொட்டி மாநகர பொறுப்பு செயலாளராக ஆர்.பி. முத்துக்குமரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில், தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் பாதாள சாக்கடைகளில் இருந்து பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி சாலைகளிலும் தெருக்களிலும் ஓடுகின்ற மோசமான நிலை உள்ளது.

இது மழை காலத்தில் தொற்று நோய் வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் உடனடியாக பாதாள சாக்கடை பணிகளை சிறப்பு கவனம் எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக தஞ்சை மாநகரில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் செய்யப்பட்ட பணிகள் பெரும்பாலானவை பொறுப்பற்ற முறையில் நடைபெற்றதால் சாலைகளில் மக்கள் நடப்பதற்கோ, பயணிப்பதற்கு இயலாத கஷ்ட நிலை உள்ளது.இதனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பேருந்துகளின் இயக்கம், பொதுமக்களின் நேர விரயம், எரிபொருள் செலவு ,போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்களை கவனம் கொண்டு உடனடியாக ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தை திறக்க வேண்டுகிறோம். பர்மா பஜாரில் பல ஆண்டுகளாக கடை வைத்து வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கையை தஞ்சை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த பகுதியின் அருகிலேயே மாற்று இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/