தஞ்சை சூன் 08: கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. மாநில தலைவர் தேவி செல்வம் தலைமை வகித்தார். பொது செயலாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பேசினர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், வேலை இழந்த உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணக்கெடுத்து வருவாய் இழப்பை மாவட்ட அளவில் நிவாரணமாக வழங்க வேண்டும்.
உயிரிழந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு குடும்பநல நிதி வழங்க வேண்டும். இதற்கான செலவீனங்களை மாவட்ட அளவில் நிரந்தர பணியில் உள்ள உடற்கல்வி சார்ந்த நண்பர்களிடம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்