தஞ்சை மார்ச் 30 தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சதாசிவம் குமார் வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட நிரப்புதல் மற்றும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அரசு ரூபாய் 600 கோடி நிதி தமிழகம் முழுவதும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது, ஆனால் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று விசாரணை நடைபெற்று வருகிறது, இதில் சில அலுவலர்கள் மீது மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை என்கின்ற பெயரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகாம்களில் தங்க வைத்து அவர்களை பராமரிக்கவும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்து அவர்களுக்கு அமைந்திட வேண்டும் பட்டுக்கோட்டை நகராட்சி நிதி ஒதுக்கப்பட்டது மேலும் பட்டுக்கோட்டை நகர்ப்புறத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தினக்கூலிகளாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆகவும் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் குறைவு மற்றும் இவர் புயல் மற்றும் அடுத்தடுத்து வந்த பேரிடரால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தேவையான பொருட்கள் வழங்குவதற்கும்,பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கு பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு ரூபாய் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அரசு நிதி ஒதுக்கியது ஆனால் அதில் புதிய மூணு லட்ச ரூபாய் நிதியை பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகள் சிலர் போலியாக கணக்கு எழுதி கையெழுத்திட்டு கையாடல் செய்தது தெரியவந்துள்ளது இதுபோன்று மக்கள் பணத்தை சுருட்டிய பட்டுக்கோட்டை நகராட்சி அரசு அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை உயர்மட்ட விசாரணை வளையத்திற்குள் கூட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டும் மேலும் மக்களுக்கான பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வேண்டுகிறோம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது,

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.