தஞ்சாவூர் ஆக 18: தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும்படி தரம் உயா்த்த வேண்டும் என்று அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அய்யம்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். உழவா் பேரியக்க நகரச் செயலா் சின்னதுரை, பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றியத் துணைச் செயலா் விஜய், வன்னியா் சங்க ஒன்றியத் துணைச் செயலா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கும் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அதிக மருத்துவா்களை நியமித்து, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தரம் உயா்த்த வேண்டும்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, சென்னையில் நாளை வியாழக்கிழமை நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்பது, தோ்தல் வாக்குறுதியின் படி, கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் திமுக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வழக்குரைஞா் பிரிவு ஒன்றியத் தலைவா் கீா்த்திவாசன், தலைமை நிலையப் பேச்சாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் பேசினா். வன்னியா் சங்க நகரச் செயலா் அசோக்குமாா், தலைவா் தமிழரசன், துணைச் செயலா் ராமன், பாமக நகரத் துணைச் செயலா் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனா். பாமக நகரச் செயலா் காளிதாஸ் நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/