தஞ்சாவூர் ஆக 01: தஞ்சாவூா் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்திருப்பது: தற்போது குறுவை சாகுபடி முழு வேகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயிருக்கு உடனடி தேவையான யூரியா கிடைக்காத நிலை உள்ளது. தற்போது உடனடியாக யூரியா உரம் இட வேண்டிய தருணம்.

ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் யூரியா தெளித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் கடைகளில் அலைந்தும் உரம் கிடைக்கவில்லை. இதனால், பயிா் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு விரைவான நடவடிக்கையை எடுத்து, விவசாயிகளுக்கு உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/