தஞ்சை, ஜன.6: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ரூ.5 கோடியில் மதிப்பிலான பல்வேறு விளையாட்டு மேம்படுத்தும் திட்டப்பணிகளுக்கு டிச.30 ந்தேதி, நடந்த விழாவின்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், 12 அடி அகலத்தில் 1300 மீட்டர் நீள நடைபயிற்சி தளம், 900 சதுர அடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம், வாலிபால் பென்சிங் மற்றும் லைட்டிங் அமைக்கவும், நுழைவுவாயிலில் ஆர்ச், அரங்கின் பின்புறம் கழிவறை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் போஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்ட ராஜ், அலெக்ஸ் மாநகராட்சி அதிகாரிகள், விளையாட்டு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டப்பணிகள் இதையடுத்து பொக்லின் எந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது.
தஞ்சை மாநகர சுற்றியுள்ள மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளையாட்டு அரங்கம் மிகுந்து பயனுள்ளதாக அமையும் என நடை பயிற்சியாளர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/
