தஞ்சாவூர் பிப்.7- தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பள்ளிக்கூடம் அருகே பாதுகாப்பற்ற நிலையில், பயன்ற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நேற்று பொக்ளீன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.

வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகில், 1979-ம் ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் அருகே இருந்த, போர்வெல் பழுதானதால், வேறு இடத்தில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டியும், போர்வெலும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி அருகே பழுதடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் அறிவுரையின்படி நேற்று பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.

அதே போல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் 20 ஆண்டுகளுக்கும் முன்பாக கூடுதல் வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அவையும் பழுதடைந்து காணப்பட்டது. அந்த பள்ளிக் கட்டிடமும் நேற்று பொக்ளீன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே பழுந்தடைந்த நிலையில் காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், பழுதடைந்த கூடுதல் வகுப்பறை கட்டிடமும் இடித்து அகற்றப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/