தஞ்சை ஏப்ரல் 11 கொரோனாவின் இரண்டாவது அலையில் பாதிப்பு முதல் அலையை விட அதிகமாகவும், மேலும் அது குழந்தைகளையும் தாக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன, சென்ற 24 மணி நேரத்தில் இந்தியாவில் 145384 கணக்கில் எடுக்கப்பட்ட புதிய கொரோனா நோயாளிகளும், மொத்தம் இந்தியா முழுவதும் 13,205,926 கொரோனா நோயாளிகளும் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கிராம புறங்களில் குறைவு என்று கணக்கெடுப்புகள் கூறினாலும், அது தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பொருந்துவது கடினம் தான், எனெனில் நிறைய அரசு உழியர்கள் நகர் புறங்களுக்கு அருகிலுள்ள தத்தமது கிராமங்களிலிருந்து தான் செல்கின்றனர், பெரும்பான்மையான கட்டிட மற்றும் பிற தொழில் செய்வோர் கிராமங்களிலிருந்தே சென்று திரும்புகின்றனர்.

இந்நிலையில் கிராமங்களில் நூற்றுக்கு தொன்னூறு விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வது மிகுந்த பாதிப்பை உண்டு செய்யக் கூடியதே, எனவே இந்திய ஒன்றிய, மற்றும் மாநில அரசு மேலும் தனியார் நிறுவனங்கள், கிராம மற்றும் ஊரகப்பகுதிகளில் விழிப்புணர்வை உண்டு செய்வதோடு மக்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடரி லிக்யூடுஸ் இலவசமாக வழங்க வேண்டும், தமிழ்நாட்டு கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் பரவினால் அதனை தடுப்பதென்பது எளிதான காரியம் இல்லை என மருத்துவ மற்றும் பொதுநல விரும்பிகள் கூறுகின்றர்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை