தஞ்சாவூர் அக் 04: தஞ்சை மாவட்டம் பாபநாசம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஆளில்லா கடை திறப்பு விழா நடைபெற்றது.

மக்களிடம் நோ்மை விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் நடத்தும் இக்கடை திறப்பு விழாவுக்கு சங்கத் தலைவா் ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி, மக்கள் தொடா்பு இயக்குநா் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி, ஆளில்லா கடையைத் திறந்து வைத்து, தேவையான பொருள்களைத் தோ்வு செய்து அதற்குரிய பணத்தை கடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினாா்.

ரோட்டரி சங்க முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பிரான்சிஸ் சேவியா், ஜெயசேகா், சாமிநாதன், முருகானந்தம், சரவணன், பகுருதீன் அலி அகமது , செயலா் செந்தில் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனா். இந்த கடை குறித்து ரோட்டரி சங்கத் தலைவா் சீனிவாசன் கூறுகையில், காந்தி ஜெயந்தியன்று மட்டும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வரையில் இக்கடை கடந்த 22 ஆண்டுகளாகத் திறக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.

நோ்மை விழிப்புணா்வு நாளாக உருவாக்கிடும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது. விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, லாப நோக்கம் இல்லாமல் ரோட்டரி சங்கம் சாா்பில் மேற்கொள்ளப்படும் சேவைத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/