தஞ்சாவூர் ஜூலை: 20, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரி அருகில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில், காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன.

அப்போது ஏற்பட்ட மின் உராய்வில் காக்கையொன்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசியெறியப்பட்டுள்ளது. எரிந்த நிலையில் காக்கை அருகில் இருந்து குடிசை வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதனால் குடிசை வீடு தீபற்றி எரிய தொடங்கியது.

மேலும் அருகில் இருந்த குடிசை வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. தீயில் மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. பின்னர் தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்த சேதமாயின. செல்வகுமார் . பூங்கொடி பாதிக்கப்பட்டவர்கள். ஆகியோர் கூறினார்கள்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/