வங்க கடல் பொங்கி தீர்த்து 16 ஆண்டுகள், 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு காலைப் பொழுது வங்கக் கடல் பொங்கி அயர்ந்து தூங்கிய மீனவ மக்கள், நடந்து போன கால்நடை வாசிகள் என ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை வாரிச் சென்றது.
இந்த சுனாமியால், நாகை, கடலூர் மற்றும் வேதாரணியம் மற்றும் சென்னை பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 6060 பேர் உயிர்களை கொண்டு சென்றது.
அது மட்டுமின்றி மீனவர்களின் வீடு மற்றும் அவர்களுடைய சொத்துக்கள் யாவும் இழந்து நின்ற பரிதாபத்தை யாரும் மறக்க முடியாது, இன்றைக்கும் அவர்கள் இழந்த உறவுகளையும் உடைமைகளையும் மீட்க முடியாத மாறாத வடுவாய் அந்த மக்களின் மனதில் உள்ளது என்பது அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை நினைத்து கடக்கும் போது அறிய முடியும்.
செய்திகள் : இளமதி