தஞ்சாவூர் நவ 08: குழந்தைகள் மற்றும் பெண்கள், முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரியப்படுத்தும் வகையில் திருச்சி ஐ.ஜி பாலகிருஷ்ணன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு சைக்கிளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை ஒட்டி இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக விரோதிகளால் குழந்தைகள் மற்றும் பெண்கள், முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உடன் காவல்துறையை தொடர்பு கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு சைக்கிளில் பயணம் செய்தார். பின்னர் பிள்ளையார்பட்டி சோழன் நகர் பகுதியில் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அந்த நோட்டீசில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் முதியவர்கள் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இலவச அலைபேசி எண்ணை அழைக்க வேண்டும். தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த விழிப்புணர்வு நோட்டீசில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அவசர உதவிக்கு 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு 14567 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக புகார்கள் தெரிவிக்க 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு பயணம் பாராட்டுக்களை பெற்றது

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/