தஞ்சாவூர், டிச.26- 53ஆவது கீழ் வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக் குழு சார்பில் நீதிமன்ற சாலையில் நடைபெற்றது.

மாநகரக்குழு ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார்.  மாநகர செயலாளர் எம்.வடிவேலன் முன்னிலை வகித்தார். கே.அன்பு, இ.வசந்தி, கிளைச் செயலாளர் பைசல் மற்றும் கிளை தோழர்கள், இன்சூரன்ஸ் அரங்கத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டையில் வெண்மணி தியாகிகளுக்கு 53 ஆவது ஆண்டு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், நிர்வாகிகள் ஞானசூரியன், முருக. சரவணன், மோரிஸ் அண்ணாதுரை, ஜீவானந்தம், உலகநாதன், தமிழ்ச்செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், நகரச் செயலாளர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் கலியபெருமாள், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை ஒன்றியம் சுக்கிரன்பட்டி – வீரக்குறிச்சியில் வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமை வகித்தார். கு.பாக்கியம் கொடியேற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.உலகநாதன், கே.பெஞ்சமின், ஆர்.ஜீவானந்தம், கிளைச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்பயத்தில் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றி வைத்தார். கிளைச் செயலாளர் எஸ். மாரிமுத்து, குமாரசாமி, கே.மாரிமுத்து, ஏ.ராமையன், வி.வீரையன், வினைதீர்த்தான், எம்.சுப்பையன், ராமையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/