தஞ்சாவூர் அக்.26 – லக்கிம்பூர் கேரியில் படுகொலையான. உழவர்களின் அஸ்தி கலயத்திற்கு தஞ்சையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் திக்குனியா என்ற இடத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் அமைதியான முறையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிற்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டபொழுது திட்டமிட்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நான்கு விவசாய போராளிகளும், ஒரு ஊடகவியலாளரும் சம்பவத்தில் பலியாகி உள்ளனர். இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நாடுதழுவிய அஸ்தி பயணம் கடந்த 23ஆம் தேதி சென்னை அடையாறு காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இன்று காலை தஞ்சாவூர் புதுக்குடி வந்தடைந்தது. அகில இந்திய விவசாய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் புதுக்குடியில் அஸ்தி பயணத்திற்கு வரவேற்பளித்து, தஞ்சாவூர் ரயிலடிக்கு அழைத்து வந்தனர்.

அஸ்தி பயணத்தில் அய்க்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமையில் சாமி. நடராஜன், சிவகங்கை முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, இளங்கீரன்,லில்லிமேரி ஆகியோர் பயணத்தில் உடன் வந்தனர் .இன்று மதியம் 12 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.
அஸ்தி கலய அஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் .வி.கண்ணன் தலைமை வகித்தார்.தமிழ் நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பா.பாலசுந்தரம், வீர.மோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர். டி. கே .ஜி.நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, சிபிஐஎம் மாவட்ட செயலாளர் கோ. நீலமேகம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்.
சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், சிபிஐ எம்எல் லிபரேஷன் மாவட்ட செயலாளர் டி.கண்ணையன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. பழனிராஜன் , விதொச மாநில நிர்வாகி கே.பக்கிரிசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன், தொழிற்சங்க நிர்வாகிகள் சிசந்திரகுமார் ஆர்.தில்லைவனம், வெ.சேவையா, துரை.மதிவாணன்இராவணன், சி .ஜெயபால், ..கே. அன்பு , ராஜா ஜெயபிரகாஷ், தேவா, மாதர் சங்க நிர்வாகிகள் தமிழ்செல்வி, வசந்தி ,மாலதி, விஜயலட்சுமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் அபிமன்னன், சின்னை பாண்டியன் , என்.சிவகுரு, சிபிஐ நிர்வாகிகள் சாமுதர்மராஜ், பி.செந்தில்குமார், சீனி. முருகையன், காசிநாதன், பாலசுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ எம் நிர்வாகிகள் வடிவேலன், குருசாமி ,சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அஸ்திக்கு மலர் தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்முன்னதாக ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் காவல்துறை அனுமதித்த நேரத்தை தாண்டி நடத்தியதால் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர், இந்து முன்னணி யினர் இடையே கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது .இதற்கு காரணமான காவல்துறை மற்றும் இந்து முன்னணியினரை கண்டித்து வருகின்ற 29-ந் தேதி தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு அறிவிக்கப்பட்டது. பின்னர் அஸ்தி பயணம் மயிலாடுதுறை, திருவாரூர் நோக்கி சென்றது.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/