14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். அமைச்சர் தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் இடைக்கால நிவாரணம் ஆயிரம் அளித்தது ஏற்றுக்கொள்ள முடியாது தொழிலாளர்களை உடனடியாக அழைத்து பேசவேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 12 போக்குவரத்து கோட்டங்களில் 461 பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். இதில் தற்போது வரை 136 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தஞ்சை நகர கோட்டத்தில் மட்டும் 110 பேருந்துகளில் 14 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுள்ளன மீதி பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை இயக்க கோரி வரும் நிலையில் தஞ்சை ஜெபமாலை புறத்திலுள்ள தஞ்சை நகர பணிமனை முன்பு தொமுச, ஏடியுசி, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.