தஞ்சை பிப் 17 தஞ்சை குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்திடும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தஞ்சாவூர் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் வரவேற்றார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

அப்போது அனைத்து ஊராட்சிகளிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட வேண்டும் இக்குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி குழந்தைகள் கடத்தப்படுதல் தடுத்தல் குழந்தை திருமணம் நடைபெறுதல் தடுத்தல் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலைமை ஏற்படுத்துதல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரங்கசாமி மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் தனபால் குழந்தைகள் நலக்குழு தலைவர் உஷா நந்தினி உறுப்பினர்கள் கனிமொழி ரமேஷ் தனஞ்சயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக் நன்றி தெரிவித்தார் இப்பயிற்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு இளைஞர் நீதி சட்டம் குழந்தைகள் உரிமைகள் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற தலைப்பில் திருச்சி சைல்டு லைன் நகர ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் குழந்தை உளவியல் குறித்து திருச்சி பல்நோக்கு சமூக சேவை மைய கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

செய்தி கு.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.