தஞ்சாவூர் அக்.08- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், மற்றும் நபார்டு நிறுவனமும் இணைந்து நடத்திய, “வேளாண் பயிர்களின் மகசூல் அதிகரிப்பில் பூஸ்டர் மற்றும் டானிக்கின் பங்கு என்ற” தலைப்பில் விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் அ.வேலாயுதம் பயிற்சி முகாம்மை தொடங்கி வைத்து,தஞ்சை மாவட்ட விவசாயிகள் விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது எப்படி, குறைந்த செலவில் சிக்கனமாக விவசாயம் செய்து, லாபகரமாகக்குவது,   வேளாண்மையை நவீனமாக்கி மக்கள் விவசாயத்தை மற்ற தொழிலை விட முதன்மையாக செய்வது எப்படி என உரையாற்றினார.

நபார்டு வங்கியின்  மாவட்ட வளர்ச்சி மேலாளர் கே பாலமுருகன் தலைமை ஏற்று உரையாற்றினார் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் சே. மோகன்தாஸ் முனைவர் ஆர், திருமுருகன் முனைவர் கெ. ஆர். ஜெகன் மோகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர்கள் செ. தமிழ்ச்செல்வி சூ.அருள் செல்வி ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினார் இப்பயிற்சி வகுப்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்ப்பட்ட விவசாய பெருமக்கள் பங்கு பெற்று பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

‍செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/