தஞ்சாவூர் பிப்.7: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி. நிலையத்தின் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் 30 கால்நடை மருத்துவர்களுக்கு மூன்று நாட்கள் கால்நடை இனப்பெருக்கத்தில் நுண்ணொலி மற்றும் ஊடுகதிர் பயன்படுத்துதல் பயிற்சி மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி மையம் நிதி உதவியுடன் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் சையத் அலி, மின்னியல் தொகுதி பயிற்சி கையேடுவை வெளியிட்டு பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் நர்மதா தலைமையுரை ஆற்றினார்.

இந்த பயிற்சியில் மாடு மற்றும் ஆடுகளில் இனப்பெருக்கத்தில் நோய் கண்டறிதல் அல்ட்ராசவுன்ட் மற்றும் எக்ஸ்ரே பயன்படுத்துதல் குறித்து வகுப்பறை பயிற்சி, செய்முறை விளக்கப் பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டன. இக்கல்லூரியின் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறைப்பேராசிரியர் மற்றும் தலைவர் சதீஷ் குமார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/