தஞ்சை ஜனவரி 21 இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யவேண்டும், 18 மாதங்கள் தள்ளி வைப்பதாக கூறாமல் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பச்சை கொடியுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடங்கிய பேரணியை உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி சிலைக்கு மாலை அணிவித்தும் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பச்சைக் கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். சாந்த பிள்ளை கேட், மேம்பாலம் வழியாக ஆற்றுப் பாலம் வந்து மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை வரை பேரணி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பச்சைக்கொடியுடனும் பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

க.சசிக்குமார், நிருபர்
தஞ்சை.