தஞ்சாவூர்,பிப்.9: தஞ்சை சீனிவாசபுரம் அருகிலுள்ள 19-வது வார்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ராஜன் தலைமையில் அ.ம.மு.கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் வின்சென்ட், வேல்முருகன், சுதாகர், பாபு, வெங்கடேசன், ரமேஷ், கந்தசாமி, ஷேக் அகமது, ஹலில் உட்பட 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் தம்பி வழக்கறிஞர் எஸ். எஸ். ராஜ்குமார் முன்னிலையில் தி.மு.க.வில் நேற்று இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 19-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் (தி.மு.க.) தமிழ்வாணன் உடனிருந்தார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/