தஞ்சை பிப் 26, தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் சென்னையில் உணவுப் பிரியர்களின் அடையாளம் என்று புகழப்படும் தொப்பி வாப்பா பிரியாணி பழைய ராணி உணவகத்தில் சிறப்புடன் இன்று தொடங்குகின்றது.
எதையும் வித்தயாசமாகவும், சிறப்பாகவும் செய்யும் தொப்பி வாப்பா நிறுவனத்தினர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சையில் தொடங்கும் போது உழவர் பெருமக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக 1/2 படி விதை நெல்லுக்கு அளவில்லா பிரியாணி என்று சொற்றோடரோடு தொடங்கியுள்ளனர் இது முதல் 100 உழவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
எதிலும் புதுமை என்பதை சிறப்பு விருந்தினர் விடயத்திலும் செய்து காட்டியுள்ளது தொப்பி வாப்பா பிரியாணி, “நம்ம ஊரு செய்திகள்” என்கின்ற யூ டியூப் சேனல் மூலமாக மாற்றத்திற்கான செய்திகளை வழங்கி வரும் பதின் வயதுக்காரர்களை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது, அவர்களது “நம்ம ஊரு செய்திகள்” என்கின்ற யூ டியூப் சேனலுக்கு 2 இலட்சம் பேரு பின் தொடர்கின்றார்கள் என்பது சிறப்பு செய்தி.
தொப்பி வாப்பா பிரியாணி சென்னையில், மடிப்பாக்கம், கைவெளி,வேளச்சேரி, பெரும்பாக்கம், மேற்கு தாம்பரம், தியாகராயர் நகர் (டி நகர்), கலைஞர் கருணாநிதி(கே.கே நகர்) நந்தம்பாக்கம், மற்றும் பெரும்பூரில் இயங்கி வருகின்றது, புதிதாக தஞ்சையில் தொடங்கியுள்ள தொப்பி வாப்பா நிறுவனத்தினை தஞ்சை டுடே வாழ்த்தி வரவேற்கின்றது.
செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை