திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துவதுடன், மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளிகளின் தாளாளர், தலைமையாசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் உரிய அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வழி கல்வி முறையாக நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள்-மாணவ, மாணவிகள் நேரடி தொடர்பில் கல்வி கற்பதால் உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றிட வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்புகளை பள்ளி தாளாளர், தலைமையாசிரியர் கண்காணித்திட வேண்டும். எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 11 பள்ளிகளை சேர்ந்த தாளாளர், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்