தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள உமையவள் ஆற்காடு கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணவெளி, நாகத்தி, உமையவள் ஆற்காடு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை திருவையாறு சாலையில் அம்மன் பேட்டையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதை அறிந்த போலீசார் அங்கு சென்று சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது போலீசார் அதிகாரிகளிடம் இது பற்றி பேசிக் கொள்ளலாம் தற்போது சாலை மறியலை கைவிடுங்கள் என்று மக்களிடம் கூறினார்கள், ஆனால் அதற்கு கிராம மக்கள் உடன்படவில்லை, இதனால் போலீசார் 150 பேரை கைது செய்து கண்டியூர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் டாஸ்மாக் போவதற்கு குறைந்துள்ளது என்கிற புள்ளி விபரத்துடன், பல இடங்களில் திறக்க முற்பட்ட டாஸ்மாக் கடைகள் மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ம.செந்தில்குமார்