தஞ்சை ஏப்ரல் 14 திருவையாறு: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமு; என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி திருவையாறு கடைவீதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 42 பேரிடம் ரூ.8400 அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பேருந்துகள், இருச்சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கண்டியூர், திருவையாறு பேருந்துநிலையம், காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் தலைமையில், தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் செந்தில், சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் அறிவுரை வழங்கி முகக்கவசம் அணிய செய்தனர். மேலும் 42 பேர்களிடம் ரூ.8400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.