தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் ‍போட்டியிட்டாலும் முதன்மையான வேட்பாளர்களாக திமுகவின் சார்பில் துரை சந்திரசேகரன் அவர்களும், பாரதிய சனதாவின் சார்பில் பூண்டி எஸ். வெங்கடேசன், அமமுக சார்பில் வேலு. கார்த்திகேயன் மற்றும் து.செந்தில்நாதன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டனர்.

தஞ்சை டெல்டா எப்போதும் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது, ஆனால் சில தேர்தல்களில் அதை தவறவும் விட்டுள்ளது, ‍ஆனால் சென்றத் தேர்தல் 2016யில் திமுக வேட்பாளர் துரைசந்திரசேகர் வெற்றி பெற்றார், அதனை தக்க வைத்து 2021 பொதுத் தேர்தலிலும் 23,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அணி சேர்த்துள்ளார்.

செய்தி தஞ்சை டுடே.